/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹார்டுவேர்ஸ் கடையில் நள்ளிரவில் பற்றிய தீ
/
ஹார்டுவேர்ஸ் கடையில் நள்ளிரவில் பற்றிய தீ
ADDED : ஜூலை 29, 2025 09:04 PM
கோவை; கோவை, நஞ்சப்பா ரோட் டில் ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை நிலையம் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் அனைவரும் கடைகளை பூட்டி சென்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ வேகமாக பரவியது. கடைக்குள் இருந்து புகை வருவதை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை மத்திய தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. கடையில் ஏ ற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.