/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நூல் தொழிற்சாலையில் தீ விபத்து; இயந்திரம், மூலப்பொருட்கள் சேதம்
/
நூல் தொழிற்சாலையில் தீ விபத்து; இயந்திரம், மூலப்பொருட்கள் சேதம்
நூல் தொழிற்சாலையில் தீ விபத்து; இயந்திரம், மூலப்பொருட்கள் சேதம்
நூல் தொழிற்சாலையில் தீ விபத்து; இயந்திரம், மூலப்பொருட்கள் சேதம்
ADDED : அக் 15, 2025 11:13 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நூல் உற்பத்தி தொழிற்சாலை, கடந்த 2007 முதல் இயங்கி வருகிறது. இங்கு, 10 பேர் வேலை செய்கின்றனர். தொழிற்சாலையில் நேற்று வேலை நேரத்தில், மோட்டார் அதிக வெப்பமடைந்து கோளாறு ஏற்பட்டு மின்கசிவால் அருகே வைக்கப்பட்டிருந்த பஞ்சில் தீ பிடித்தது எரியத் துவங்கியது.
சிறிது நேரத்திலேயே தொழிற்சாலை முழுவதும் தீ பரவியதில், மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்து கீழே விழுந்தது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர். இதனால், தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.
கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மூன்று தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மேலும், தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்கள் தீயில் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.