/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப்படைதளம் அருகே தீயால் பரபரப்பு
/
விமானப்படைதளம் அருகே தீயால் பரபரப்பு
ADDED : ஜூலை 25, 2025 03:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: விமானப்படை தளம் அருகே தோட்டத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை சூலுாரில் இந்திய விமானப்படைதளம் உள்ளது. நேற்று இரவு விமானப்படைதளம் அருகே உள்ள தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தோட்டத்தில் உள்ள குப்பையை எரித்ததால் தீ பரவியது தெரிந்தது. குப்பைகளை எரித்தவர்களை போலீசார் எச்சரித்தனர்.

