/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து மாவட்ட அதிகாரிகளுடன் தீயணைப்புத்துறை டி.ஜி.பி.,ஆய்வு
/
ஐந்து மாவட்ட அதிகாரிகளுடன் தீயணைப்புத்துறை டி.ஜி.பி.,ஆய்வு
ஐந்து மாவட்ட அதிகாரிகளுடன் தீயணைப்புத்துறை டி.ஜி.பி.,ஆய்வு
ஐந்து மாவட்ட அதிகாரிகளுடன் தீயணைப்புத்துறை டி.ஜி.பி.,ஆய்வு
ADDED : ஜூன் 05, 2025 01:17 AM

கோவை; தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், கோவை தீயணைப்பு நிலையத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஐந்து மாவட்ட அலுவலர்களுடன், ஆலோசனை நடத்தினார்.
தீயணைப்பு நிலையங்களில் உள்ள உபகரணங்கள், வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வணிக வளாகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள், கோவில்கள் ஆகிய இடங்களில், தீ விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என கேட்டறிந்தார்.
பின், தீயணைப்பு நிலையங்கள் மற்றும் அதிகாரிகள், வீரர்களின் குறைகளை கேட்டறிந்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் குறித்து விசாரித்தார்.
கோவையில் காலியாக உள்ள, 30 பணியிடங்களுக்கு ஆட்கள் ஒதுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த கூட்டத்தில், தீயணைப்புத்துறை கோவைமாவட்ட அலுவலர் புளுகாண்டி, நீலகிரி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, ஈரோடு மாவட்ட அலுவலர் முருகேசன், திண்டுக்கல் மாவட்ட அலுவலர் விவேகானந்தன் மற்றும் உதவி மாவட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.