/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காவலாளி கையில் பட்டாசு வெடித்து விரல்கள் துண்டானது
/
காவலாளி கையில் பட்டாசு வெடித்து விரல்கள் துண்டானது
காவலாளி கையில் பட்டாசு வெடித்து விரல்கள் துண்டானது
காவலாளி கையில் பட்டாசு வெடித்து விரல்கள் துண்டானது
ADDED : மார் 26, 2025 09:14 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பகுதியில் காட்டு யானையை விரட்ட முயற்சித்த காவலாளி கையில் பட்டாசு வெடித்து, விரல்கள் துண்டானது.
பொள்ளாச்சி அருகே, நாகரூத் பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்,24. இவர், ஆழியாறு பனப்பள்ளம் பகுதியில் தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றுகிறார்.
நேற்று, அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள், தோட்டத்துக்குள் வருவதை கண்ட அவர், அதிக வெடி சப்தம் எழுப்பும் 'பானம்' எனும் பட்டாசுகளை எடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கையில் வைத்திருந்த சில பட்டாசு சேர்ந்து வெடித்ததால், அவரது ஐந்து விரல்களும் துண்டானது. கால் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து, பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகள், ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக வெடி திறனுள்ள பட்டாசுகளை கையாளும் போது, கவனமாக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.