/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலில் கால்கள்... பின் மனைவி... பின் தந்தை இழப்புகள் தொடர்ந்தும் துவளவில்லை பழனிகுமார்! அடுத்த போராட்டம் வீட்டுமனை பட்டாவுக்கு

ADDED : ஏப் 19, 2025 11:48 PM

சாய்பாபாகாலனி, வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். 37 வயதாகும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில், தனது இரு கால்களையும் இழந்துள்ளார்.
விபத்துக்குப் பிறகு, மனைவி அவரை விட்டுச் சென்ற நிலையில், தந்தையின் ஆதரவில் வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்.
வாழ்க்கையின் அடுத்த இடியாக, தந்தையும் மறைந்து விட, நிர்க்கதியாக நின்றார் பழனிகுமார். தாயையும் காக்க வேண்டிய நிலைக்கு ஆளானவர், பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்க ஆரம்பித்தார்.
காலை 6:00 முதல் இரவு 11:00 மணி வரை உணவு டெலிவரி மற்றும் பைக் டாக்ஸி பணிகள் செய்து, சிரமப்பட்டு வருவாய் ஈட்டி வருகிறார்.
தற்போது வாடகை வீட்டில், தனது தாயுடன் வசித்து வரும், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையை இணைத்து, அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கோரி, கடந்த ஜனவரியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''நான் 90 சதவீத மாற்றுத்திறனாளி. தந்தை மறைவுக்குப் பிறகு வாழ்க்கை மிக கடினமாகிவிட்டது. வேறு வழியின்றிதான், இந்த உடல் நிலையில் இருந்தும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.
வீட்டுமனை பட்டா கோரி, மனு அளித்தும் இதுவரை பதில் இல்லை. மறுமுறை போய் கேட்டால், மீண்டும் மனு அளியுங்கள் என்கிறார்கள்.
ஒரு மனு கொடுக்கவே ஒரு நாள் செலவாகிறது. அதனால் ஒரு நாள் வருமானத்தையும் இழக்கிறேன். எனவே மாவட்ட நிர்வாகம் எனக்கு உதவ வேண்டும்,'' என்கிறார்.