/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் வரத்து அதிகம்; விலை வீழ்ச்சி
/
மீன் வரத்து அதிகம்; விலை வீழ்ச்சி
ADDED : செப் 07, 2025 11:01 PM

கோவை; மீன் பிடி தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து, கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
கோவை மீன் மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், நா கப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய வட்டங்களில் இருந்து மீன் வரத்து இருக்கும். வார நாட்களில், 20 முதல் 30 டன் வரத்தும், வார இறுதியில் 40 டன் வரத்து இருக்கும். கோவையில் நேற்று 50-60 டன் மீன்கள் வரத்து இருந்தது.
மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் வஞ்சரம் மீன் வழக்கமாக, 500 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாகும், சில நேரங்களில், 1500 ரூபாய் வரை கூட விற்பனை செய்யப்படும். நேற்று, 250 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு விற்பனையானது.
தவிர, பிற மீன்கள் அனைத்தும், 100 முதல் 200 வரை விலை குறைந்து விற்பனையானது.
கோவை மீன் மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், 'வழக்கத்தை காட்டிலும் கூடுதல் மீன் வரத்து இருந்தது. மத்தி 100 ரூபாய்க்கும், அயிலை 120 முதல் 150 ரூபாய் வரையும், இறால் 300 முதல் 400 ரூபாய் வரையும், சங்கரா 150 முதல் 250 ரூபாய் வரையும், நெத்திலி 200 முதல் 250 வரையும், வஞ்சரம் சைஸ் வாரியாக 250 முதல் 500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது' என்றார்.