/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுரையில் ஐவர் பூப்பந்து போட்டி
/
மதுரையில் ஐவர் பூப்பந்து போட்டி
ADDED : ஜூலை 13, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மதுரையில் வரும் ஆக., 16 மற்றும் 17ம் தேதிகளில், 44வது மிக இளையோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான ஐவர் பூப்பந்து போட்டி நடக்கிறது.
இதையடுத்து, கோவை மாவட்டத்தின் சார்பாக பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கான தேர்வுத் திறன் போட்டி ஆக., 3ம் தேதி காலை, 7:15 மணிக்கு நடக்கிறது.
இதில், பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், 2010ம் ஆண்டு ஜன., 2ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.
அதற்கான ஆவணங்களை, தேர்வுத் திறன் போட்டிக்கு வருவோர், கட்டாயம் கொண்டு வர வேண்டும் என, மாவட்ட பூப்பந்தாட்ட கழக செயலாளர் மார்ஷல் தெரிவித்துள்ளார்.