/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் 'யங்' வீரருக்கு ஐந்து விக்கெட்
/
மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் 'யங்' வீரருக்கு ஐந்து விக்கெட்
மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் 'யங்' வீரருக்கு ஐந்து விக்கெட்
மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் 'யங்' வீரருக்கு ஐந்து விக்கெட்
ADDED : ஏப் 07, 2025 10:46 PM

கோவை ; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மூன்றாவது டிவிஷன் 'என்.தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் டிராபி' போட்டி இ.ஏ.பி., மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடந்துவருகிறது.
நேற்று முன்தினம், சச்சின் கிரிக்கெட் கிளப் அணியும், யங்பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சச்சின் கிரிக்கெட் கிளப் அணி, 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 131 ரன்கள் எடுத்தது.
அணி வீரர்கள் சையது நுார் இதயதுல்லா, 32 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர்களான சரண்ராஜ் ஐந்து விக்கெட்களும், ரூபக்குமார் மூன்று விக்கெட்களும் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய, யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 34.5 ஓவரில் நான்கு விக்கெட்களுக்கு, 135 ரன்கள் எடுத்தனர்.
அணி வீரர்கள் கார்த்தி கேயன், 42 ரன்களும், அரவிந்த், 46 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.