/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூச்சாட்டு விழா ஆலோசனை கூட்டம்
/
பூச்சாட்டு விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 27, 2025 09:34 PM
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பூச்சாட்டு விழா தொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டம் கோவில் அறங்காவலர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறுகையில், பூச்சாட்டு விழாவின் துவக்க நிகழ்வாக வரும் ஜூன் 10ம் தேதி கம்பம் நடுதல், 17ம் தேதி சக்திகரகம் அழைத்தல், 18ம் தேதி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், மாவிளக்கு போடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், 19ம் தேதி மஞ்சள் நீராட்டு நடத்துதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

