/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாயிபாபா காலனியில் மேம்பாலம் ரூ.52.90 கோடியில் பணி துவக்கம்
/
சாயிபாபா காலனியில் மேம்பாலம் ரூ.52.90 கோடியில் பணி துவக்கம்
சாயிபாபா காலனியில் மேம்பாலம் ரூ.52.90 கோடியில் பணி துவக்கம்
சாயிபாபா காலனியில் மேம்பாலம் ரூ.52.90 கோடியில் பணி துவக்கம்
ADDED : மார் 11, 2024 01:33 AM
கோவை;கோவை சாயிபாபா காலனியில் ரூ.52.90 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கான பூர்வாங்க பணிகள் துவங்கின.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், சாயிபாபா காலனி பகுதியில் கங்கா மருத்துவமனை முன் துவங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை, 1,140 மீட்டர் நீளத்துக்கு ரூ.52.90 கோடியில், நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது. இ.பி.சி., முறையில், ஒப்பந்த நிறுவனத்துக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டு, 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டு இருக்கிறது.
மேம்பாலம் கட்டுமான பணியை முழுமையாக செய்து முடிக்க, 24 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, 2026 மார்ச், 6ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நிலப்பரப்பு அளவீடு மற்றும் போர்வெல் போட்டு மண் பரிசோதனை செய்யும் பணியை ஒப்பந்த நிறுவனத்தினர் துவக்கியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:
சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டுவதற்கு பூர்வாங்கப் பணியை ஒப்பந்த நிறுவனத்தினர் துவக்கி இருக்கின்றனர். இ.பி.சி., முறையில் டெண்டர் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இ.பி.சி., என்றால், மேம்பாலம் கட்ட வேண்டிய நிலப்பரப்பு ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டு விடும். அப்பகுதியை மீண்டும் ஆய்வு செய்து, மண் பரிசோதனை செய்து, எங்கெங்கு துாண்கள் அமைக்க வேண்டுமென முடிவெடுத்து, மேம்பாலத்தின் வடிவமைப்பை ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்து, ஒப்புதல் பெற வேண்டும்.
மின் கம்பங்கள் இட மாறுதல் செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை அந்நிறுவனமே மேற்கொள்ள வேண்டும். அரசு துறை சார்ந்த ஒத்துழைப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை வழங்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

