/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி கொண்டாட்டத்தில் கவனம்; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
தீபாவளி கொண்டாட்டத்தில் கவனம்; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தீபாவளி கொண்டாட்டத்தில் கவனம்; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தீபாவளி கொண்டாட்டத்தில் கவனம்; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 28, 2024 12:31 AM

வால்பாறை : தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என, தீயணைப்பு துறையினர் விழிப்புண்வு ஏற்படுத்தினர்.
வால்பாறை தீயணைப்புத்துறை சார்பில், தீ விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறுகுன்றா எல்.டி., ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வேல்மயில், தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பிரகாஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீயணைப்பு நிலையவீரர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வினியோகித்தனர்.
தீயணைப்பு துறையினர் பேசும் போது, விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுளை வெடிக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
குழந்தைகள் சட்டைப்பையில் பட்டாசு வைக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. பட்டாசுகளை கடையிலிருந்து வாங்கி செல்லும் போது, பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டும்.
சமையல் அறைக்கு அருகில் பட்டாசுகளை வைக்க கூடாது. பெரியர்வர்கள் மேற்ப்பார்வையில் மட்டுமே குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கைகளில் தொடவோ, காலால் மிதிக்கவோ கூடாது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்றனர்.