/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவு தொழில்நுட்பம் அவசியம் நேரு கல்லுாரியில் தேசிய மாநாடு
/
உணவு தொழில்நுட்பம் அவசியம் நேரு கல்லுாரியில் தேசிய மாநாடு
உணவு தொழில்நுட்பம் அவசியம் நேரு கல்லுாரியில் தேசிய மாநாடு
உணவு தொழில்நுட்பம் அவசியம் நேரு கல்லுாரியில் தேசிய மாநாடு
ADDED : அக் 23, 2025 11:53 PM

கோவை: கோவை நேரு தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், கோவையில் உள்ள உணவு தொழில்நுட்பத்துறை மற்றும் அறிவியல் மற்றும் மனிதநேயத்துறை இணைந்து, புதுமையை அறுவடை செய்வோம் என்பதை மையமாக கொண்டு. இரண்டு நாள் தேசிய அளவில் வேளாண் உணவு தொழில்நுட்ப மாநாடு கல்லுாரி அரங்கில் நடந்தது.
நேரு கல்வி நிறுவனங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார், உணவு கழிவுகளை மதிப்புமிக்க தயாரிப்புகளாக மாற்றுவதற்கு தொழில்நுட்பங்களின் தேவை மற்றும் பயன்பாட்டின் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பாதுகாப்பான உணவு வழங்குவதன் முக்கியத்துவம், வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சியில் நிலைத்தன்மை மற்றும் ஏ.ஐ., பயன்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் விளக்கமளித்தனர். தேசிய அளவில், 85 கல்லுாரிகளில் இருந்து ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
சி.எஸ்.ஐ.ஆர். மூத்த விஞ்ஞானி அருண்குமார், முதல்வர் சிவராஜா, உணவு தொழில்நுட்பத்துறை தலைவர் ஹேமா பிரபா, நேரு கல்வி குழுமங்களின் செயல் இயக்குனர் நாகராஜா, பல்வேறு முன்னணி உணவு நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

