sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவி

/

 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவி

 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவி

 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவி


ADDED : நவ 28, 2025 04:50 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்ட கால்நடைத்துறை சார்பில், 37 பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவி வழங்கப்பட்டது.

மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், நடப்பாண்டு மாநிலம் முழுவதும் உள்ள, மூவாயிரம் சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

இச்சலுகையை பெற, சிறு, குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். இரண்டு பெரிய கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், 0.25 ஏக்கர் தீவன சாகுபடி நிலத்தோடு, மின் வசதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.

இந்நிலையில், பொள்ளாச்சி கோட்ட கால்நடைத்துறை சார்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு தீவன புல் நறுக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி, உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.

கோவை மண்டல துணை இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் சக்ளாபாபு முன்னிலை வகித்தார். அதன்படி, 37 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us