/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து காப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வனத்துறையினர் எதிர்பார்ப்பு
/
விபத்து காப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வனத்துறையினர் எதிர்பார்ப்பு
விபத்து காப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வனத்துறையினர் எதிர்பார்ப்பு
விபத்து காப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வனத்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 17, 2025 12:32 AM
தொண்டாமுத்தூர்; விபத்து காப்பீடு மற்றும் உயிரிழந்தால் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
கோவை வனக்கோட்டத்தில், ஊருக்குள் புகும் வனவிலங்குகளை, மீண்டும் வனத்திற்குள் விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களுக்காக நாள்தோறும் உயிரை பணயம் வைத்து போராடி வரும் தங்களுக்கு, வனவிலங்குகளால் ஏற்படும் காயங்களுக்கு, மருத்துவ காப்பீடு வசதி இல்லை என்று புலம்புகின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
கோவை வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முதல் வனவர் வரை, சுமார், 150 சீருடை பணியாளர்களும், தற்காலிக பணியாளர்களான, வேட்டைத்தடுப்பு காவலர்கள், சுமார், 120 பேரும் பணிபுரிந்து வருகிறோம்.
மற்ற அரசு துறை பணியாளர்களைவிட, எங்கள் பணியில் ஆபத்து அதிகம். சீருடை பணியாளர்களுக்கு, மாதந்தோறும் சம்பளத்தில், 200 முதல் 300 ரூபாய் வரை, தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால், இந்த மருத்துவ காப்பீடு, நோய்வாய் பட்டால் மட்டுமே பயன்படுகிறது. பணியின்போது, வனவிலங்குகளால் ஏற்படும் விபத்துகளுக்கு, மருத்துவ சிகிச்சை பெற முடிவதில்லை. அதேபோல, பணியில் வனவிலங்குகளால், உயிரிழக்கும் வனத்துறையினரின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
ரிஸ்க் அலவென்ஸ் தொகையாக, மாதம், 500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். எனவே, அனைத்து வனத்துறை பணியாளர்களுக்கும், வனவிலங்குகளால் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற மருத்துவ காப்பீட்டும், உயிரிழப்புகள் ஏற்பட்டால், இழப்பீட்டு தொகையை, ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மருத்துவ காப்பீடு, நோய்வாய் பட்டால் மட்டுமே பயன்படுகிறது. பணியின்போது, வனவிலங்குகளால் ஏற்படும் விபத்துகளுக்கு, மருத்துவ சிகிச்சை பெற முடிவதில்லை. அதேபோல, பணியில் வனவிலங்குகளால், உயிரிழக்கும் வனத்துறையினரின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.