/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலில் முதியோர் ஓட்டுப்போட 224 பேரிடம் படிவம் 6 வாங்கியாச்சு!
/
தேர்தலில் முதியோர் ஓட்டுப்போட 224 பேரிடம் படிவம் 6 வாங்கியாச்சு!
தேர்தலில் முதியோர் ஓட்டுப்போட 224 பேரிடம் படிவம் 6 வாங்கியாச்சு!
தேர்தலில் முதியோர் ஓட்டுப்போட 224 பேரிடம் படிவம் 6 வாங்கியாச்சு!
ADDED : மார் 18, 2024 01:03 AM
கோவை;லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் பொருட்டு மாவட்டத்தில், 224 முதியவர்களிடம் இருந்து படிவம், 6 பெறப்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19ம் தேதி நடக்க உள்ளது. முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் முதியோர் காப்பகங்களில் உள்ள முதியோர்களின் தகவல்களை பெற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, முதியோர் காப்பகங்களுக்கு படிவம் 6 வழங்கப்பட்டு, அதில் தகவல்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர். நேற்று மாலை வரை, பல்வேறு முதியோர் காப்பகங்களில் உள்ள, 224 முதியோரிடம் இருந்து படிவம், 6 பெறப்பட்டது.