/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரந்தரமாக இடம் பெயர்ந்தவருக்கு படிவம்: ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கு 'மெமோ'

ADDED : நவ 07, 2025 09:26 PM
கோவை: ரேஸ்கோர்ஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்றவர்களுக்கு, வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி துவக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 3,117 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 32.25 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கான கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வினியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்து பெற, டிச. 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள், நிரந்தரமாக முகவரி மாறிச் சென்றவர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் இருப்பவர்களின் பெயர்களை, பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் ஆணையம் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மாநகராட்சி 66வது வார்டு ரேஸ்கோர்ஸ் டி.ஆர்.ஓ.காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு, கவுண்டம்பாளையம் குடியிருப்பில் மாற்று வீடு வழங்கப்பட்டு விட்டது.
வீட்டை காலி செய்து விட்ட, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அவர்கள் எங்கு வசிக்கிறார்களோ, அந்த தொகுதியில் புதிதாக சேர்க்க வேண்டும்.
மாறாக, ரேஸ்கோர்ஸ் பகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பிரியதர்ஷினி, நிரந்தரமாக இடம் பெயர்ந்து சென்றவர்களை போனில் அழைத்து, வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வினியோகித்துள்ளார்.
பூர்த்தி செய்த படிவத்தை, மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்துக்கு நேரில் வந்து வழங்க அறிவுறுத்தினார். இதுதொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலருக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கப்பட்டது.
அதற்கு, 'வீடு பூட்டியிருந்தால் வாக்காளரின் மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசலாம் என்கிற அடிப்படையில், தொடர்பு கொண்டு படிவம் வழங்கினேன்' என, அவர் விளக்கம் கூறியிருக்கிறார்.
வாக்காளரை தொடர்பு கொண்டு பேசுவதில் தவறில்லை. நிரந்தரமாக வீட்டை காலி செய்து விட்டு, வேறு தொகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றவர்களுக்கு படிவம் வழங்கியது தவறு என்பதால், அவர் கொடுத்த விளக்கம் ஏற்புடையதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, அவரிடம் விசாரணை நடத்தி, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.