/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நம்பர் ஒன் அங்கீகாரம் பெற்ற 'வாக்கரூ' காலணி
/
நம்பர் ஒன் அங்கீகாரம் பெற்ற 'வாக்கரூ' காலணி
ADDED : நவ 07, 2025 09:27 PM
கோவை: முன்னணி காலணி பிராண்ட் வாக்கரூ, உலகப் புகழ் பெற்ற மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் கேடன்ஸ் இன்டர்நேஷனல் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில், இந்தியாவின் நம்பர் ஒன் பி.யு., காலணி பிராண்ட் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து, வாக்கரூ நிறுவனத் தலைவர் நவுஷாத் கூறியதாவது:
2012ம் ஆண்டில் துவங்கிய வாக்கரூ பயணம், இன்று இந்தியாவின் மிகப்பெரிய பி.யு.காலணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தினசரி 5 லட்சம் ஜோடி பியு காலணிகள் தயாரிக்கும் திறனுடன், 700க்கும் மேற்பட்ட டீலர்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேலான ரீடெய்லர்களின் ஆதரவால், வாக்கரூ நகரங்களிலும் கிராமங்களிலும், நுகர்வோரிடம் எளிதில் சென்றடைகிறது
தொடக்கம் முதலே வாக்கரூ, பாதத்துக்கு மென்மை தரும் வடிவமைப்புகளையும், எல்லோருக்கும் ஏற்ற விலையில் முன்னிலைப்படுத்தி, கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளது. நுகர்வோரின் தேவைகளை முன்னிலைப்படுத்தி, செயல்பட்டதற்கான அங்கீகாரமாக இதை பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

