/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜே.சி.டி. கல்லுாரியில் 'திறமை தேடல்' நிகழ்ச்சி
/
ஜே.சி.டி. கல்லுாரியில் 'திறமை தேடல்' நிகழ்ச்சி
ADDED : நவ 07, 2025 09:27 PM

கோவை: பிச்சனுாரில் அமைந்துள்ள, ஜே.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், மாணவர்களின் பல்துறை திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில், 'திறமை தேடல்' என்ற போட்டி நடந்தது.
கல்லுாரி முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது, மாணவர்களின் தன்னம்பிக்கையை, ஒற்றுமை பண்பை வளர்க்கும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் சுமார் 800 மாணவர்கள் புகைப்படம், குறும்படம், பாடல், நடனம் போன்ற போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு மாணவரும் தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தி நிகழ்வை சிறப்பாக்கினர்.

