/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் அமைச்சர் கொடும்பாவி எரிப்பு
/
முன்னாள் அமைச்சர் கொடும்பாவி எரிப்பு
ADDED : ஜூன் 22, 2025 11:03 PM
பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், எதிர்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் உதயகுமார் உருவபொம்மை எரிக்கும் போராட்டம் நடந்தது.
தி.மு.க., மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சருமான ராஜாவை விமர்சித்து பேசிய, அ.தி.மு.க., எதிர்கட்சி துணை தலைவர் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது.
அதில், உதயகுமாரின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.,வினர் கோஷங்களை எழுப்பினர். தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.மாவட்ட, நகர இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, ஏ.எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்தனர்.