/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்களை கவுரவித்த முன்னாள் மாணவர்கள்
/
ஆசிரியர்களை கவுரவித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : ஆக 18, 2025 09:21 PM

அன்னுார்; ஓய்வு பெற்ற ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்.
சொக்கம்பாளையத்தில் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1977 முதல் 2010ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து குழு அமைத்தனர். இக்குழு சார்பில் பள்ளிக்கு விரைவில் கலையரங்கமும், நவீன ஆய்வகமும் கட்டித்தர தீர்மானித்துள்ளனர்.
இதன் துவக்க விழா நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசுகையில், ''இந்த சிறிய கிராமம் அனைத்து வசதிகளும் பெற்றதாக திகழ்கிறது,'' என்றார். பள்ளி தலைமை ஆசிரியை லோகாம்பாள் பேசுகையில், ''இப்பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளது,'' என்றார்.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், கல்வி குழு நிர்வாகி திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தியாகி பெட்டையன் குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பலரும் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்குவதாக உறுதியளித்தனர். அன்னுார் ரோட்டரி சங்கம் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெராக்ஸ் மெஷினை, ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.