ADDED : ஜூலை 06, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அவிநாசி, அன்னுார், மேட்டுப்பாளையம் வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த, தமிழக அரசு 238 கோடி ரூபாய் ஒதுக்கியது.
திருப்பூர் மாவட்டத்தில், 13 கி.மீ., கோவை மாவட்டத்தில் 25 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
பணி துவங்கி ஐந்து மாதங்கள் ஆனது. இந்நிலையில், கோவை மாவட்ட எல்லையான கஞ்சப்பள்ளி பிரிவில் தார் ஊற்றி சமன்படுத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணியை கோவை வட்ட நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.