/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.21.40 லட்சம் மோசடி
/
முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.21.40 லட்சம் மோசடி
முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.21.40 லட்சம் மோசடி
முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.21.40 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 23, 2025 09:58 PM
கோவை; கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் பட்டீஸ் பிரவீன், 40. இவரது மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., ஒன்று வந்தது. அதில், மேக்கிங் மணி என்ற செயலி வாயிலாக, முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பட்டீஸ்பிரவீன் அந்த செயலி மூலம், 13 தவணைகளில் ரூ.13.70 லட்சத்தை முதலீடு செய்தார். இந்நிலையில் லாபம், முதலீட்டு தொகை திருப்பித்தரப்படவில்லை.
அதில் வழங்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, முறையான பதில் கிடைக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பட்டீஸ்பீரவீன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.இதேபோல், கோவை வீரகேரளத்தை சேர்ந்த சபரிவாசன் என்பவர், ஆன்லைனில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியதை நம்பி, ரூ.7.70 லட்சம் முதலீடு செய்தார்.
ஆனால், லாபம் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம், புகார் அளித்தார். வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.