/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக உதவி பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி
/
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக உதவி பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக உதவி பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக உதவி பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி
ADDED : அக் 23, 2024 05:30 AM
கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக, உதவி பேராசிரியரிடம் ரூ.4.61 லட்சம் மோசடி செய்த இருவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
நாகர்கோவில் ராமன் புதுாரை சேர்ந்தவர் செல்வகுமார், 41. திருநெல்வேலி திசையன்விளையில் உள்ள தனியார் கல்லுாரியில், 12 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
2021ம் ஆண்டு, கோவை சித்தாபுதுாரில் செயல்பட்டு வந்த கேரியர் பாயின்ட் என்ற நிறுவனத்தில் இருந்து கோவிந்தராஜ் என்பவர், போனில் செல்வகுமாரை தொடர்பு கொண்டுள்ளார்.
தங்கள் நிறுவனத்தில் இருந்து, கனடாவுக்கு ஆட்களை பணிக்கு அனுப்பி வருவதாகவும், விருப்பம் இருந்தால் நேரில் வந்து விண்ணப்பம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.
செல்வக்குமார், 2021ம் ஆண்டு ஜூனில், கோவை நிறுவனத்தில் கோவிந்தராஜை சந்தித்தார். கனடா பணிக்கு ரூ.5 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார்.
செல்வகுமார், நிறுவனத்தின் உரிமையாளர் ஜனார்த்தனன் வங்கி கணக்கிற்கு, பல்வேறு தவணைகளாக ரூ-.4.61 லட்சம் அனுப்பினார். பல நாட்களாகியும் கனடா வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில், சென்னையில் அதே நிறுவனத்தின் கிளையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரிடம் பண மோசடி நடைபெற்று இருப்பதாக, தகவல் கிடைத்தது.
கோவையில் அந்த நிறுவனம் பூட்டப்பட்டு பல நாட்களாகிவிட்டதாக, அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்வக்குமார், நிறுவனத்தின் உரிமையாளர் ஜனார்த்தனன், கோவிந்தராஜ் ஆகியோரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.
போன் எண், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. செல்வகுமார் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜனார்த்தனன், 45, மகேஷ், 46 என்கிற கோவிந்தராஜ் ஆகிய இருவர் மீதும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.