/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பதுங்கியிருந்த மோசடி ஆசாமி கைது
/
கோவையில் பதுங்கியிருந்த மோசடி ஆசாமி கைது
ADDED : அக் 16, 2025 02:02 AM

கோவை: கோவையில் பதுங்கியிருந்த மோசடி ஆசாமியை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
விருதுநகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மகன் சித்ரவேல், 32, பெங்களூரில் வசிக்கிறார். எச்.ஆர்.எம்., பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார்.
சீனாவை சேர்ந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக விளம்பரப்படுத்தினார். இவரது நிறுவனத்தில் பலர், கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர்.
முத லீடு செய்தவர்களுக்கு பணம் வரவில்லை. விசாரித்தபோது, போலியாக நிறுவனம் நடத்தி ஏமாற்றியது தெரிந்தது. பாதிக்கப்பட்டோர், டில்லியிலுள்ள சி.பி.ஐ.,யில் புகார் அளித்தனர். சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிந்து, சித்ரவேலை தேடினர்.
இந்நிலையில், கோவை, ரேஸ்கோர்சிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த சித்ரவேலுவை கைது செய்தனர். சோதனையில் போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டை, 32 போலி சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சித்ரவேலுவை, கோ வை சி.ஜே.எம்., கோர்ட்டில் நீதிபதி சிவகுமா ர் முன் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, டில்லியிலுள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், இன்று மாலை, 5:00 மணிக்குள் ஆஜர்படு த்த உத்தரவிடப்பட்டது.
கோவையிலிருந்து விமானத்தில் நேற்று மதியம் அவரை அழைத்து சென்றனர்.