/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.டி.கார் அருங்காட்சியகத்தில் 'பர்பாமன்ஸ் கார்' பிரிவு
/
ஜி.டி.கார் அருங்காட்சியகத்தில் 'பர்பாமன்ஸ் கார்' பிரிவு
ஜி.டி.கார் அருங்காட்சியகத்தில் 'பர்பாமன்ஸ் கார்' பிரிவு
ஜி.டி.கார் அருங்காட்சியகத்தில் 'பர்பாமன்ஸ் கார்' பிரிவு
ADDED : அக் 16, 2025 05:36 AM

கோவை: கோவையில் உள்ள ஜி.டி.கார் அருங்காட்சியகத்தில், நாளை முதல் 'பர்பாமன்ஸ் கார் பிரிவு' தொடங்கப்படுகிறது. இளைஞர்கள் மோட்டார் வாகனங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், வாகனத்துறையில் அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், இப்புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஸ்போர்ட்ஸ் கார்கள், சூப்பர் கார்கள், லக்சூரி கார்கள், ரேஸ் கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இடம்பெறுகின்றன.
இதில் லம்போர்கினி, பெராரி, மெக்லாரன், லோட்டஸ், மசெராட்டி, அஸ்டன் மார்டின், மாஸ்டா, போர்ஷே பாக்ஸ்டர், ரோல்ஸ் ராய்ஸ் எபெக்டர் போன்ற பிரபலமான கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கோவையை சேர்ந்த கார் பந்தய வீரர் கரிவரதன் உருவாக்கிய, இந்தியாவின் முதல் ரேஸ் கார் — போர்டு ஜிடி 40, அதோடு எல்ஜிபி ரொலான், எம்ஆர்எப் 1600, எம்ஆர்எப் 2000 போன்ற பல்வேறு இந்திய ரேஸ் கார்களை காணலாம்.
ஆட்டோ காம்போனென்ட்ஸ், கோ-கார்ட், பார்முலா ரேஸ் கார்கள், ரேஸ் டிராக்குகள், மோட்டார் விளையாட்டு அணிகள், பண்பாடு மற் றும் பாரம்பரியம் ஆகிய வற்றின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும், புதிய பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பிரிவின் தொடக்க விழா, வரும் 17ம் தேதி(நாளை) நடக்கிறது. பொதுமக்களுக்கு இப்பிரிவு, 22ம் தேதி முதல் திறந்து வைக்கப்படுகிறது.
மோட்டார் விளையாட்டு துறையில், கோவையின் பங்களிப்பை பெருமையுடன் வெளிப்படுத்தும் வகையில், இந்த 'பர்பார்மன்ஸ் கார் பிரிவு' துவக்கப்பட்டுள்ளது. இது, எதிர்கால இளைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் இயந்திர நுணுக்கங்களை அறிய உதவும். - கோபால், நிர்வாக அறங்காவலர் ஜி.டி.நாயுடு அறக்கட்டளை