/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உப்பிலிபாளையம் சந்திப்பில் மீண்டும் 'சிக்னல்' : இனியாவது முடிவுக்கு வருமா சிக்கல்?
/
உப்பிலிபாளையம் சந்திப்பில் மீண்டும் 'சிக்னல்' : இனியாவது முடிவுக்கு வருமா சிக்கல்?
உப்பிலிபாளையம் சந்திப்பில் மீண்டும் 'சிக்னல்' : இனியாவது முடிவுக்கு வருமா சிக்கல்?
உப்பிலிபாளையம் சந்திப்பில் மீண்டும் 'சிக்னல்' : இனியாவது முடிவுக்கு வருமா சிக்கல்?
ADDED : அக் 16, 2025 05:37 AM

கோவை: ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்ட பின், அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. உப்பிலிபாளையம் சந்திப்பு மற்றும் கோல்டுவின்ஸ் அருகே, தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் மட்டும் வாகனங்கள் தேங்குகின்றன.
மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி, சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மதன்குமார் ஆகியோர், அவ்விரு பகுதிகளிலும் நேற்று கள ஆய்வு செய்தனர்.
போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நேரங்களில், ட்ரோன் மூலமாக வீடியோ எடுக்கப்பட்டது. எந்தெந்த வழித்தடங்களில் வாகனங்கள் தேங்குகின்றன, அவை எங்கிருந்து வந்து இணைகின்றன என்பதை நெடுஞ்சாலைத்துறையினரும், போலீசாரும் ஆய்வு செய்தனர்.
'தீபாவளி பண்டிகைக்கு பர்ச்சேஸ் செய்ய மக்கள் வருகின்றனர்; சிலர் புதுப்பாலத்தில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர் என்பதால், வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
பண்டிகை முடிந்த பின், வாகன எண்ணிக்கையை ஆய்வு செய்து, 'ரவுண்டானா'வை மாற்றியமைப்பது தொடர்பாக முடிவெடுக்கலாம்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் டிராபிக் சிக்னல் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமம் தவிர்க்க, உப்பிலிபாளையம் சந்திப்பு மற்றும் எல்.ஐ.சி., சந்திப்பில், மீண்டும் தானியங்கி சிக்னல் முறை அமலுக்கு வந்துள்ளது.
எல்.ஐ.சி., சந்திப்பில் வாகனங்கள் தேங்காமல் செல்ல, போக்குவரத்து போலீசார் நின்றிருந்து, மைக்கில் அறிவுறுத்தல் வழங்குகின்றனர்.
அதேநேரம், அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தில் இருந்து வருவோர், நஞ்சப்பா ரோட்டுக்கு திரும்பாத வகையில், டிவைடர்கள் வைத்து மறிக்கப்பட்டுள்ளது.
உப்பிலிபாளையம் சந்திப்பில் திரும்பி, அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு வந்து, மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் வலதுபுறம் திரும்பி, நஞ்சப்பா ரோட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதால், டிவைடர்களை அகற்றி, பழைய முறையில் திரும்பிச் செல்லும் வகையில், வழித்தடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
'முடியட்டும் தீபாவளி
அப்புறம் பாருங்கள்'
மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி கூறியதாவது: மேம்பாலத்தில் வருவோரின் வேகத்தை கட்டுப்படுத்த, இறங்கு தளம் அமைந்துள்ள இடங்களில் வேகத்தடை அமைக்க ஆலோசித்து வருகிறோம். சர்வீஸ் ரோட்டில் வரும் வாகனங்களே சந்திப்பு பகுதியில் தேங்குகின்றன. அதற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகிறோம். 2,000 மீட்டர் நீளத்துக்கு மழை நீர் வடிகால் கட்ட வேண்டியிருக்கிறது. கிளை ரோடுகள் சில இடங்களில் சீரமைக்க வேண்டும். இவ்வேலைகளை ஒரு மாதத்துக்குள் முடித்து விடுவோம். தீபாவளி முடிந்த பின், வாகன போக்குவரத்தை மீண்டும் கணக்கிட்டு, போக்குவரத்து போலீசாருடன் ஆலோசித்து, 'ரவுண்டானா' மாற்றியமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.