/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளியை முன்னிட்டு 13 இடத்தில் 'பார்க்கிங்' வசதி
/
தீபாவளியை முன்னிட்டு 13 இடத்தில் 'பார்க்கிங்' வசதி
தீபாவளியை முன்னிட்டு 13 இடத்தில் 'பார்க்கிங்' வசதி
தீபாவளியை முன்னிட்டு 13 இடத்தில் 'பார்க்கிங்' வசதி
ADDED : அக் 16, 2025 05:37 AM
கோவை: தீபாவளியை முன்னிட்டு, கோவையில், 9 இடங்களில் கோபுரங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தீபாவளிப் பண்டிகை, வரும், 20ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால், பெரிய கடைவீதி, ரங்கே கவுடர் வீதி, திருச்சி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது.
கூட்டத்தை பயன்படுத்தி நடக்கும் திருட்டு, பிக்பாக்கெட் தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 13 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கண்காணிப்பு கோபுரங்களில் ஷிப்ட் முறையில், போலீசார் பணியமர்த்தப்படுவர். அங்கிருந்தபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.
ராஜ வீதியில் துணி வணிகர் பள்ளி, சி.எஸ்.ஐ., பள்ளி, ஒப்பணக்கார வீதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகடைவீதியில் மைக்கேல் பள்ளிகளில் இலவச பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
வடகோவை மாநகராட்சி பள்ளி மைதானம், கிராஸ்கட் ரோட்டில் 8ம் நம்பர் மாநகராட்சி பார்க்கிங், ஒன்பதாவது வீதியில் ஸ்ரீ தேவி பார்க்கிங் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி ரோட்டில் சிங்காநல்லுார் எல்.ஜி. மைதானம், வெங்கடலட்சுமி திருமண மண்டபம், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பார்க்கிங் வசதி உள்ளது. கொடிசியா மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.