/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேன்சர் நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை
/
கேன்சர் நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை
ADDED : ஜூன் 17, 2025 11:09 PM
கோவை; மருத்துவர், புற்றுநோய் என கூறி விட்டால், அதற்கான சான்று சரியானதா என்பதை அறிந்து கொள்ளும் வேகம், தற்போது மக்களிடையே இருக்கிறது.
புற்றுநோய் என கண்டுபிடித்து சொன்ன டாக்டரை, முழுமையாக நம்பினாலும் கூட, எதற்கும் இன்னொரு டாக்டரை பார்த்து, ஆலோசனை கேட்பது நல்லது என்கிறது மருத்துவ உலகம். புற்றுநோய் உள்ளதா, இல்லையா, சரியான சிகிச்சை என்ன என்பது குறித்து, மற்றொரு ஆலோசனை பெற, சிறந்த வாய்ப்பை கே.எம்.சி.எச்., மருத்துவமனைவழங்குகிறது.
கே.எம்.சி.எச்., மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மறு ஆலோசனை முகாம், வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. மேற்கொண்டு பரிசோதனை தேவைப்பட்டால், சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய, 87548 87568 என்ற எண்ணில் அழைக்கலாம்.