/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல்நீரிழிவு பாதிப்புக்கு இலவச ஆலோசனை
/
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல்நீரிழிவு பாதிப்புக்கு இலவச ஆலோசனை
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல்நீரிழிவு பாதிப்புக்கு இலவச ஆலோசனை
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல்நீரிழிவு பாதிப்புக்கு இலவச ஆலோசனை
ADDED : மார் 15, 2024 12:19 AM
கோவில்பாளையத் தில் உள்ள கே.எம்.சி.எச்.,ல் நீரிழிவு (சர்க்கரை) பாதிப்புக்கான, இல வச ஆலோசனை முகாம் நடக்கிறது.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய 24 மணி நேர விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவு, ஐ.சி.யூ., குழந்தைகள் ஐ.சி.யூ., எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், 'சி.டி.,' ஸ்கேன்,, எம்.ஆர்.ஐ., ஸ்கேன், கேத்லேப், பார்மஸி வசதிகள் உள்ளன.
நீரீழிவு பாதிப்புக்கான இலவச மருத்துவ ஆலோசனை சிறப்பு முகாம், மார்ச் மாதம் முழுவதும் நடக்கிறது. முகாமில், ரத்தத்தில் சர்க்கரை அளவு, மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு, ரத்தத்தில் உப்பு சத்தின் அளவு பரிசோதனைகள் மற்றும் உணவு ஆலோசனை வழங்கப்படுகிறது. ரூ.1,200க்கான இப்பரிசோதனைகள், சர்க்கரை பாதிப்புள்ளோருக்கு சிறப்பு சலுகையாக ரூ.399க்கு மேற்கொள்ளப்படுகிறது. இத்துடன், மருத்துவர் ஆலோசனை மற்றும் பதிவு கட்டணம் இலவசம்.
முகாமில் பரிந்துரைக்கப்படுவோருக்கு, 50 சதவீத கட்டணத்தில் டாப்ளர் மற்றும் பாத பரிசோதனை ஸ்கேன், பிற பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் சிறப்பு கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாமதமாக குணமாகும் காயங்கள் மற்றும் புண்கள், அதிக தண்ணீர் தாகம், மிகவும் சோர்வாக உணர்வது, வறண்ட சருமம், எவ்வித முயற்சியும் இன்றி எடை குறைதல், கை அல்லது கால்களில் மறத்து போகும் உணர்வு, உணர்வின்மை அல்லது வலி, அதிக பசி, மங்கலான கண்பார்வை தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
முகாமில் பங்கேற்கும் சர்க்கரை பாதிப்புள்ளோருக்கு புண்கள் வராமல் தடுக்க ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை மற்றும் பாதங்களுக்கு ஏற்ப காலணிகள் பரிந்துரைக்கப்படும்.
முகாம், மார்ச் 30ம் தேதி வரை, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது.
முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு, 87541 87551, 73393 33485 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

