/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தம்பு மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
/
தம்பு மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
ADDED : அக் 26, 2025 11:22 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஈஷா ஆரோக்கிய அலை, பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை ராவ் மருத்துவமனை மற்றும் கோவை எப்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாமை, தம்பு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தியது.
இங்கு மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி, மூட்டு தேய்மானம், முடக்குவாதம் மற்றும் பெண்கள் நல மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், பொது மருத்துவம் தொடர்பான பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இது தவிர, ரத்தப் பரிசோதனையில் ஹீமோகுளோபின், சர்க்கரை அளவு பரிசோதனை, இ.சி.ஜி., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர். முகாமில், பெரியநாயக்கன்பாளையம் பாலமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சித்ரா சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், விஜயகுமார், ராயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

