ADDED : மார் 09, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: வருவாய் துறை சார்பில், தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்ட மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நரசீபுரத்தில் நடந்தது. எம்.பி., ஈஸ்வரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 190 பேருக்கு இலவச பட்டாவும், 66 பேருக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையும் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தெற்கு கோட்டாட்சியர் மாருதி பிரியா, பேரூர் தாசில்தார் சேகர், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
