தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சரக்கு ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு

சரக்கு ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு

சரக்கு ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு


UPDATED : நவ 15, 2026 06:53 PM

ADDED : நவ 15, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 06:53 PM ADDED : நவ 15, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: நம் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

அந்த அமைப்பு தலைவர் ரஹ்மான் கூறியதாவது: 2025 அக்டோபரில் சரக்கு ஏற்றுமதி 34.11 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் நம்நாட்டின் சரக்கு ஏற்றுமதி 49.7 பில்லியன் டாலராக அதிகரித்தது.

இன்ஜினியரிங், பெட்ரோலியம், மின்னணு சாதனங்கள், மருந்து பொருட்கள், ஆபரணங்கள், ஜவுளி, பிளாஸ்டிக் ஆகியவை வளர்ச்சிக்கு காரணம். இது இந்தியாவின் ஏற்றுமதித் திறன்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய உதவும். வளர்ச்சியை தக்க வைக்க, உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் நிலையான போட்டித்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

கடன், குறைந்த பரிவர்த்தனை செலவு, தளவாட வசதிகள் செய்து கொடுப்பதால், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சியடைவார்கள். அரசு, தொழில்துறை ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தை சரியாக பயன்படுத்துவதும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us