தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாலை நேர பஸ் அடிக்கடி 'கட்' பள்ளி மாணவர்கள் அப்செட்

 மாலை நேர பஸ் அடிக்கடி 'கட்' பள்ளி மாணவர்கள் அப்செட்

 மாலை நேர பஸ் அடிக்கடி 'கட்' பள்ளி மாணவர்கள் அப்செட்


ADDED : ஜூலை 27, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையிலிருந்து ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு செல்லும், மாலை நேர பஸ் அடிக்கடி நிறுத்தம் செய்யப்படுவதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு காலை முதல் இரவு வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாணவர்கள் கூறியதாவது:

ஹைபாரஸ்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மாணவர்கள், வால்பாறை நகரில் உள்ள பள்ளி, கல்லுாரியில் படிக்கிறோம். மாலை, 5:30 மணிக்கு வால்பாறையிலிருந்து முடீஸ் வழியாக ஹைபாரஸ்ட் எஸ்டேட் வரை இயக்கப்படும் அரசு பஸ் கடந்த சில நாட்களாக இயக்கப்படுவதில்லை.

இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து, இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் பளளி, கல்லுாரி முடிந்து வீடு திரும்பும் போது போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி, மாலை நேரத்தில் ைஹபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சை வழக்கம் போல் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us