ADDED : ஜூலை 27, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு எச்.எம்.எஸ்., கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர் பேரவை நிர்வாகிகள் கூட்டம் சிங்காநல்லுார் தியாகி என்.ஜி.ஆர்., மஹாலில் நடந்தது.
கட்டுமான, அமைப்புசாரா, ஆட்டோ தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை வாரியமே ஏற்கவேண்டும், பாலின பாகுபாடின்றி 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. பேரவை தலைவர் சுப்ரமணியம், செயல் தலைவர் ராஜாமணி, துணைத்தலைவர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
