/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை; விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
/
வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை; விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை; விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை; விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
ADDED : ஆக 29, 2025 09:30 PM

வால்பாறை, ; வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை நடத்த வேண்டும் என, விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், விஸ்வஹிந்து பரிஷத் ஆலோசனைக்கூட்டம் நகர செயலாளர் குட்டன்திருமேனி தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில், விஸ்வ ஹிந்த பரிஷத் கோவை கோட்ட பொறுப்பாளர் மகேஷ், சத்சங்கம் பிரமோத் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் குப்பை தேங்கியுள்ளதால், சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. கோவிலில் தேங்கி கிடக்கும் குப்பையை நகராட்சி சார்பில் உடனடியாக அகற்ற வேண்டும். கோவிலை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் விளக்கு பூஜை நடத்த வேண்டும். மாதம் தோறும் பவுர்ணமி நாட்களில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடத்த வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் சுற்றுப்பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஹிந்து கோவில்களில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வாரம் தோறும் உழவாரப்பணி மேற்கொள்ள வேண்டும். கோவில்களில் தினமும் பூஜைகள் நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
சுப்ரமணிய சுவாமி கோவில் நுழைவுவாயிலின் முன், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கோவில் முன்பாக அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விஸ்வ ஹிந்து பரிஷத் ஒன்றிய அமைப்பாளர் மருதமுத்து நன்றி கூறினார்.