/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி பிங்க் ரோந்து வாகனத்தில்.பெண் போலீசார்! .. ஆண் போலீசுடன் வலம் வருவர்
/
இனி பிங்க் ரோந்து வாகனத்தில்.பெண் போலீசார்! .. ஆண் போலீசுடன் வலம் வருவர்
இனி பிங்க் ரோந்து வாகனத்தில்.பெண் போலீசார்! .. ஆண் போலீசுடன் வலம் வருவர்
இனி பிங்க் ரோந்து வாகனத்தில்.பெண் போலீசார்! .. ஆண் போலீசுடன் வலம் வருவர்
ADDED : டிச 14, 2025 05:05 AM

கோவை :'பிங்க்' ரோந்து வாகனத்தில், இனி ஆண் போலீசாருடன் பெண் போலீசாரும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசு சார்பில், கோவை மாநகர போலீசாருக்கு, ஏழு பிங்க் ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன. நவ., 15ம் தேதி இவ்வாகனங்கள் மாநகர போலீசாருக்கு வழங்கப்பட்டன.
மாநகரின் ஏழு பிரிவுகளில், இவ்வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் வரும் போது, பிங்க் ரோந்து வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை பாதுகாத்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ரோந்து வாகனங்களில் பெண் போலீசாருக்கு பதில், ஆண் போலீசாரே பணியில் இருப்பதால் பெண்கள், குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளிப்படையாக சொல்ல தயக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிங்க் ரோந்து வாகனங்களில், டிரைவருடன் பெண் போலீசாரும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பிங்க் வாகனத்தில் ஆண் போலீசாரே டிரைவராக இருப்பார். அது தவிர, பெண் சிறப்பு எஸ்.ஐ., ஒருவர், கான்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருப்பார். தற்போது சிறப்பு எஸ்.ஐ.,களுக்கு பதில், பெண் தலைமை காவலரும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

