/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ஜி ஸ்கொயர் 'செவன் ஹில்ஸ்' திட்டம்
/
கோவையில் ஜி ஸ்கொயர் 'செவன் ஹில்ஸ்' திட்டம்
ADDED : ஜூன் 07, 2025 11:39 PM

கோவை: கோவைப்புதுாரில், 714 ஏக்கர் பரப்பளவில், 3,000க்கும் மேற்பட்ட மனைகளுடன் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டது.
வரதராஜபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த அறிமுக விழாவில், ஜி ஸ்கொயர்' குழுமத்தின் நிறுவனர் பால ராமஜெயம் கூறியதாவது:
'தி கோவை ஹில்ஸ்' திட்டம், 714 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதற்கட்டமாக, 406 ஏக்கர் பரப்பளவில் 3,127 டி.டி.சி.பி., மற்றும் ரெரா அங்கீகாரம் பெற்ற பிரீமியம் பிளாட்கள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து மீதமுள்ள, 308 ஏக்கர் பரப்பளவானது, சிக்னேச்சர் வில்லாக்கள், மற்றும் அபார்ட்மென்ட் கட்டுமானங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், வணிக பூங்காக்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள், விளையாட்டுப் பயிற்சி மையங்கள், மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் அமைய உள்ளன.
கோவைப்புதுாரில், மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே இயற்கை சூழல் மிக்க முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. 1.5 சென்ட் முதல் 40 சென்ட் வரை, இடங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.