/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேலோ இந்தியா வாலிபால் கற்பகம் பல்கலை கலக்கல்
/
கேலோ இந்தியா வாலிபால் கற்பகம் பல்கலை கலக்கல்
ADDED : ஜன 31, 2024 11:51 PM

கோவை : கேலோ இந்தியா வாலிபால் போட்டியில், தங்கம் வென்ற தமிழக அணி சிறப்பாக விளையாடிய கற்பகம் பல்கலை மாணவரை, பல்கலை நிர்வாகிகள் பாராட்டினர்.
கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 6வது சீசன் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடந்தது. அதன் ஒரு பகுதியாக வாலிபால் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜன., 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்தது.
இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், தமிழக அணி 3 - 1 என்ற செட் கணக்கில், ஹரியானா அணியை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றது.
தமிழக அணியில் இடம் பிடித்த கற்பகம் பல்கலை மாணவர் அதுல் நாயக், சிறப்பாக விளையாடி தமிழக அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.
அவரை, கற்பகம் பல்கலை துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பாராட்டினர்.