/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் அசத்தல்
/
பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் அசத்தல்
பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் அசத்தல்
பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 26, 2025 09:59 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் களிமண் விநாயகர் சிலைகளை வடிவமைத்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விநாயகரை வழிபடுவதும், அவரின் வாழ்வியல் குறித்து மாணவர்கள் கலந்துரையாடினர். மாணவர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்களின் பெற்றோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
* குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. மழலையர் பிரிவு குழந்தைகள் விநாயகர், சிவன், பார்வதி, முருகன் மற்றும் நாரதர் வேடமிட்டு நாடகம் மற்றும் நடனம் நடத்தினர். பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி தலைமை வகித்தார். குழந்தைகளின் பெற்றோரும் விழாவில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார். விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பள்ளி வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
மாணவர்கள் வீட்டிலிருந்து முளைப்பாரியிட்டு வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். மாணவர்களின் கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களின் பெற்றோரும் விழாவில் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி அருகே கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து விநாயகர் சிலையை மலர்களால், வண்ணமயமாக அலங்கரித்தனர்.
அதன்பின், படையல் வைத்து பஜனை பாடல்களை பாடி விநாயகப்பெருமானை வணங்கினர். மாணவ, மாணவியரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பிரகாஷ் பங்கேற்று, விநாயகர் வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
* பொள்ளாச்சி அருகே ஆர்.கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், விநாயகர் துதிப்பாடல், விநாயகர் சதுர்த்தி குறித்த உரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மாணவர் ஒருவர் விநாயகர் போல வேடமணிந்து வகுப்புகள் தோறும் சென்று மாணவர்களுக்கு ஆசி வழங்கினார். பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர்.