/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
/
விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
ADDED : ஆக 31, 2025 11:20 PM

வால்பாறை; வால்பாறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
வால்பாறை ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கடந்த 27ம் தேதி கோவில் மற்றும் வீடுகளில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஐந்து நாட்கள் வழிபாட்டிற்கு பின், நேற்று வால்பாறை நகருக்கு விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே நிறுத்தப்பட்டன.
பிற்பகல், 2:00 மணிக்கு விசர்ஜன ஊர்வலத்தையொட்டி நடந்த பொதுக்கூட்டத்திற்கு, ஹந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். நகர தலைவர் சதீஷ், செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஹிந்துமுன்னணி மாநிலச்செயலாளர் அண்ணாத்துரை, கோவை கோட்ட செயலாளர் பாலச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்டு, காந்திசிலை, வாழைத்தோட்டம், புதிய பஸ் ஸ்டாண்டு ஸ்டேன்மோர் பிரிவு , போலீஸ் ஸ்டேஷன் வழியாக கொண்டு செல்லப்பட்ட சிலைகள், நேற்று மாலையில் நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
வால்பாறை டி.எஸ்.பி., பவித்ரா தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சாரல் மழை வால்பாறையில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான சாரல்மழை மட்டுமே பெய்தது. இதனால் வருண பகவானுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.