ADDED : செப் 24, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : கேங்மேன்கள் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலானதால் தங்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு வேண்டும் எனக் கூறி கடந்த ஏழு நாட்களாக 'விதிப்படி வேலை' என்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கரியாம்பாளையம் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கேங்மேன்களின் ஒரு தரப்பினர் வேலை நிறுத்தத்தால், கரியாம்பாளையம் பகுதியில் மின் விநியோகம் மற்றும் பியூஸ் கால் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன,' என்று தெரிவித்தனர்.