ADDED : ஆக 26, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பெ.நா.பாளையத்தைச் சேர்ந்த ஹரிகரன்,25, கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகப்பன்,23, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட நாகப்பன் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., கார்த்திகேயன், கலெக்டர் பவன்குமாருக்கு பரிந்துரைத்தார்.
கலெக்டர் உத்தரவுப்படி, கொலை வழக்கில் கைதான நாகப்பன் குண்டர் சட்டத்தின் கீழ், நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். உத்தரவு நகல், சிறையில் உள்ள அவருக்கு வழங்கப்பட்டது.