/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குப்பை அள்ளுவோரை இழிவுபடுத்தக் கூடாது'
/
'குப்பை அள்ளுவோரை இழிவுபடுத்தக் கூடாது'
ADDED : ஆக 25, 2025 09:47 PM
கோவை; கோவை மாவட்ட நகர உள்ளாட்சி ஓட்டுனர் மற்றும் அனைத்து துாய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாடு, திவ்யோதயா அரங்கில் நேற்று நடந்தது. சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநாட்டில், 'குப்பையை சாலைகளில் கொட்டாமல், துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்; அவர்களை இழிவுபடுத்தக்கூடாது, செப்., 2ல் பி.எப்., நிதி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது, துாய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும்' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணை தலைவர் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன், மாவட்ட செயலாளர் நாராயணன், தெற்கு மண்டல செயலாளர் அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.