/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்லா இடத்திலும் குப்பை: எப்போ உணர்வாங்க தப்பை?
/
எல்லா இடத்திலும் குப்பை: எப்போ உணர்வாங்க தப்பை?
ADDED : டிச 12, 2024 05:59 AM

தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படாமல் உள்ளது.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு, தேவராயபுரம், வெள்ளிமலைபட்டிணம், நரசீபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், இக்கரைபோளுவாம்பட்டி, தென்னமநல்லூர், மத்வராயபுரம், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய, 10 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்து, உரம் தயாரிக்க தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இத்திட்டத்தை, ஒரு சில ஊராட்சிகள் மட்டுமே முறையாக பின்பற்றி வருகின்றன. மற்ற ஊராட்சிகளில், பெயரளவிற்கு மட்டுமே திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கையில், 'பெரும்பாலான ஊராட்சிகளில், சாலையோரங்களிலேயே குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் குப்பையை அகற்றாமல், தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால், காற்று மாசுபடுவதோடு, அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு உடல்நல பாதிப்பும் ஏற்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து வீணாகி வருகிறது.
மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகைகள், பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம், அனைத்து ஊராட்சிகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தபட தேவையான நடவடிக்கை எடுத்து, கிராமப்புறங்களை தூய்மையாக்க வேண்டும்' என்றனர்.