/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை பஸ் ஸ்டாண்டில் குவிந்து கிடக்கும் குப்பை
/
மருதமலை பஸ் ஸ்டாண்டில் குவிந்து கிடக்கும் குப்பை
மருதமலை பஸ் ஸ்டாண்டில் குவிந்து கிடக்கும் குப்பை
மருதமலை பஸ் ஸ்டாண்டில் குவிந்து கிடக்கும் குப்பை
ADDED : டிச 29, 2025 06:00 AM

வடவள்ளி: மருதமலை பஸ் ஸ்டாண்டில் குவிந்து கிடக்கும் குப்பையை, சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் அகற்றாததால், பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது, சபரிமலை மற்றும் ஓம் சக்தி கோவிலுக்கு மாலை அணிந்து செல்வோர் அதிகம் வந்து செல்கின்றனர். இதனால், மருதமலை அடிவாரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு, ப ல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வருகை தருகின்றனர்.
இந்த பஸ் ஸ்டாண்ட், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் குப்பை குவியலாகவே உள்ளது.
இதனை, ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாததால், இங்கு வரும் பக்தர்கள், குப்பை குவியலை கண்டு முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் முறையாக தினசரி குப்பையை சுத்தம் செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத் துள் ளனர்.

