/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
600 இடங்களில் குப்பை தேக்கம்; நாறுகிறது நகரம்: சுறுசுறுப்பு இல்லாத மாநகராட்சி சுகாதாரப் பிரிவு
/
600 இடங்களில் குப்பை தேக்கம்; நாறுகிறது நகரம்: சுறுசுறுப்பு இல்லாத மாநகராட்சி சுகாதாரப் பிரிவு
600 இடங்களில் குப்பை தேக்கம்; நாறுகிறது நகரம்: சுறுசுறுப்பு இல்லாத மாநகராட்சி சுகாதாரப் பிரிவு
600 இடங்களில் குப்பை தேக்கம்; நாறுகிறது நகரம்: சுறுசுறுப்பு இல்லாத மாநகராட்சி சுகாதாரப் பிரிவு
ADDED : அக் 24, 2025 01:33 AM

கோவை: கோவை நகர் பகுதியில் நாளொன்றுக்கு 1,250 டன் குப்பை சேகரமாகும். இவற்றை சேகரிக்கும் பணியில், 5,668 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமு றையில் சென்ற தொழிலாளர்களில் பலரும் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை. பண்டிகைக்கு மறுநாள் 60 சதவீத தொழிலாளர்களே பணிக்கு வந்தனர். நேற்று முன்தினமும் குறைவானவர்களே வந்தனர். நேற்றும் 65 சதவீத தொழிலாளர்களே வந்தனர். வந்திருந்தவர்கள் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டது.
ஒப்பந்த லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருவதால், சில இடங்களில் குப்பையை கிடங்கிற்கு எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்டது. கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அருகே மூன்று நாட்களாக குப்பை எடுக்கப்படாமல் அவ்வீதியில் பரவிக் கிடப்பதால் சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது.
இதேபோல், 600 இடங்களில் அள்ளப்படாமல் தேங்கியிருப்பதாக, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்திருக்கிறது.
பிரதான ரோடுகளில் தேங்கியுள்ள குப்பையை மட்டும் சுகாதாரப் பிரிவினர் அகற்றியுள்ளனர். குறுக்கு வீதிகளில் அள்ளப்படவில்லை. வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் பணிக்கும் துாய்மை பணியாளர்கள் இன்னும் வராததால், அவற்றை பொது இடங்களில் மக்கள் மீண்டும் கொட்ட ஆரம்பித்து விட்டனர். சில நாட்களாக மழையும் பெய்து வருவதால், துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. தொற்று நோய் பரவும் முன் குப்பை பிரச்னைக்கு மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''துாய்மை பணியாளர்கள் வருகை பதிவு குறைவாக இருக்கிறது. இருப்பினும், 1,150 டன் குப்பை சேகரிக்கப்பட்டது. தேங்கியுள்ள இடங்களில் இருந்து அகற்றி வருகிறோம். சில டிரைவர்கள் பணிக்கு வரவில்லை. மாற்று டிரைவர்கள் நியமித்து, வாகனங்கள் இயக்கப்படுகின்றன. நாளை (இன்று) முதல் சரியாகி விடும்,'' என்றார்.

