/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயான இடத்தில் குப்பை மாற்று நிலையம்; அ.தி.மு.க., -தி.மு.க.,வினர் காரசாரம்
/
மயான இடத்தில் குப்பை மாற்று நிலையம்; அ.தி.மு.க., -தி.மு.க.,வினர் காரசாரம்
மயான இடத்தில் குப்பை மாற்று நிலையம்; அ.தி.மு.க., -தி.மு.க.,வினர் காரசாரம்
மயான இடத்தில் குப்பை மாற்று நிலையம்; அ.தி.மு.க., -தி.மு.க.,வினர் காரசாரம்
ADDED : மே 15, 2025 11:35 PM

கோவை : மயான இடத்தில் குப்பை மாற்று நிலையம் அமைக்க அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க, தி.மு.க.,வினர் ஆதரவு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், மாமன்ற அவசர கூட்டம் நடந்தது. கூட்டம் ஆரம்பித்தவுடன், மாநகராட்சியில் உள்ள மயானங்கள் எத்தனை மணி நேரம் செயல்படுகின்றன என்று அதிகாரிகளிடம் மேயர் கேள்வி எழுப்பினார்.
அப்போது, அ.தி.மு.க. கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன்,''மாநகராட்சியில் பெரும்பாலான மின் மயானங்கள் செயல்படுவதே இல்லை. பல மாலை, 4:00 மணி வரை மட்டுமே செயல்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். அவசரமாக, 103 தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதன் அவசியம் என்ன,'' என்றபோது குறுக்கிட்ட மேயர் ரங்கநாயகி,''மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே இத்தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்,'' என்றார்.
காரசாரம்!
கூட்டத்தில்,பேசிய பிரபாகரன்,''26வது வார்டில் மயான இடத்தில் குப்பை மாற்று நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, அத்தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.
குறுக்கிட்ட கம்யூ., கட்சி கவுன்சிலர்கள் சிலர்,'மக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீங்கள் வேண்டுமென்றே இங்கு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்' என்றதும், 'உங்கள் வார்டு பிரச்னையை நீங்கள்தான் பேச வேண்டும்; நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கம்யூ., அல்ல; தி.மு.க.,வினர்' என, பிரபாகரன் பேச சலசலப்பு அதிகரித்தது.
ஆவேசமாக பேசிய மேயர்,''இப்படியே நீங்கள்(பிரபாகரன்) பேசிக்கொண்டிருந்தால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருக்கும்,'' என்றார். மத்திய மண்டல தலைவர் மீனாவோ,''இவருக்கு பயந்து எதற்கு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவரை வெளியேற்றுங்கள்,'' என்று பேச வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.
அ.தி.மு.க., பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில், ''மேயர் மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. வார்டு, 26ல் ஏற்கனவே, 2 ஏக்கரில் குப்பை மாற்றும் நிலையம் உள்ளது. அது போதாதென்று அருகே மயானத்தில், 55 சென்ட் இடத்தில் குப்பை மாற்று நிலையம் அமைப்பதாக கூறுகின்றனர். இங்கு குப்பை மாற்று நிலையம் வந்தால் அ.தி.மு.க., மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும். தி.மு.க.,வின் கொள்கை பரப்பு கூட்டம்தான் இது; அவசர கூட்டம் அல்ல,'' என்றார்.