/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் மரபணு திருத்த பயிற்சி
/
வேளாண் பல்கலையில் மரபணு திருத்த பயிற்சி
ADDED : ஜன 29, 2025 11:10 PM
கோவை; வேளாண் பல்கலை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மையம், தாவர உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில் , பயிர் தாவரங்களில் மரபணு திருத்தம் குறித்த, ஐந்து நாள் செயல்முறை பயிற்சி துவங்கியது.
துறை இயக்குநர் செந்தில், தாவரங்களில் மரபணு திருத்த ஆராய்ச்சியில் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் குறித்து விளக்கினார். தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்பிரமணி, தாவர மரபணுவை வெட்டுவதிலும், திருத்துவதிலும் சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர்., கருவியின் பங்கு குறித்து விளக்கினார்.
உயிர் தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, பேராசிரியர் அருள், நாடு முழுதும் இருந்து பல்வேறு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

