தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வண்ணம் தீட்டிய குழந்தைகளுக்கு பரிசு

வண்ணம் தீட்டிய குழந்தைகளுக்கு பரிசு

வண்ணம் தீட்டிய குழந்தைகளுக்கு பரிசு


UPDATED : நவ 21, 2026 08:12 PM

ADDED : நவ 21, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 08:12 PM ADDED : நவ 21, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: குழந்தைகள் தினத்தையொட்டி, விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உதவி போலீஸ் கமிஷனர் சரவணன் (சாய்பாபா காலனி, சரகம்) சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 3–5, 6–9, 9–12 என வயது அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

4வது ஆண்டாக நடந்த இப்போட்டியில், 100க்கும் அதிகமான சிறுவர், சிறுமியர் பங்கேற்று, ஓவிய திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர்.

முதல் மூன்று இடம் பிடித்த குழந்தைகளுக்கு, ரூ.10 ஆயிரம் மதிப்பில் சைக்கிள், ரூ.5 ஆயிரம் மதிப்பில் இசைக் கருவி, ரூ.3 ஆயிரம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 10 குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மிருதுபாஷிணி, நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன், பொது மேலாளர் ரெஜித் ராஜன், ஓவிய ஆசிரியர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us